சொடக்கு போட்டு கோபியிடம் சவால்... பாக்கியாவில் தரமான சம்பவம்: ஆடிப்போன குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியிடம் சொடக்கு போட்டு சவால் விட்டுள்ள காட்சி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ராதிகா, கோபி வீட்டில் அனைவரையும் கடுப்பேற்றி வரும் நிலையில், கோபிக்கு பழனிச்சாமி மீது பொறாமையாகவும் இருந்து வருகின்றது. ஒரு கட்டத்தில் பழனிச்சாமி வீட்டிற்கே சென்று அவரிடம் சண்டையிட்டு வந்தார்.
இந்நிலையில் மாமியாரை ராதிகா மரியாதை இல்லாமல் பேசியதால், ஆதங்கப்பட்ட தான் ஒரு மாதத்தில் வீட்டிற்கான பணத்தை தருவதாகவும், வீட்டை விட்டு போய் விட வேண்டும் என்று கோபிக்கு சவால் விடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |