கோபியை வெறுத்த இனியா! பாக்கியாவை நினைத்து கதறிய சோகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு ராதிகா குறித்த உண்மையை குடும்பத்திற்கு அம்பலப்படுத்திய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
சீரியல் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.
இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது. பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபியின் உண்மையான மனைவி பாக்கியா என்பதை அறிந்து கொண்ட ராதிகா ஊரை விட்டுச் செல்ல முடிவெடுத்தார். பின்பு ராதிகாவின் பிரச்சினை பாக்கியலட்சுமிக்கும் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.
பாக்கியா எடுத்த அதிரடி முடிவு
கோபியின் சுயரூபத்தை அறிந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி தனது தொழில் செய்யும் இடத்தில் தங்கியுள்ளார். ஆனால் தாய் பாக்கியாவை நினைத்து இனியா கதறி அழுகின்றார்.
இனியாவின் கதறலுக்கு செழியனின் மனைவி ஜெனிபர் ஆறுதல் கூறிவரும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.