பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஜாலியாக சுற்றும் பிக்பாஸ் பிரபலம் ! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் புது ஹேர் ஸ்டைல் செய்து கலக்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சி ஒளிப்பரப்பான “மாயா” என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகர் அசீம்.
இதனை தொடர்ந்து “பிரிவோம் சந்திப்போம்” மற்றும் “தெய்வம் தந்த வீடு ” என்ற இரண்டு சீரியல்களும் அசீமிற்கு சின்னத்திரையில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது.
இவரின் ஆட்டம் “ பிரியமானவளே” என்ற சீரியலில் நடித்த பின்னர் தான் வெளியுலகிற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு பல அடிகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் பிக் பாஸ் சீசன் 6 ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவரின் வாதங்கள் உண்மையாக இல்லாவிட்டாலும் அவரின் ரியலை கேமராவின் காட்டியிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவரின் வார்த்தை பிரயோகங்கள் தவறாக இருந்ததாலும், சில செயற்பாடுகள் அருவருக்கத்தக்கதாக இருந்ததாலும் சக போட்டியாளர்களால் வெறுக்கப்பட்டார். மாறாக எதிர்பாராத விதமாக பிக் பாஸ் சீசன் 6 க்கான “டைட்டில் வின்னர்” பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
சர்ச்சைக்கு மத்தியில் ஹேர் ஸ்டைல் மாற்றிய அசீம்
இதனை தொடர்ந்து இவர் தொடர்பில் பல சர்ச்சையான விடயங்கள் வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பல பதிலடிகளையும் கொடுத்து வருகிறார். இவருக்கு பக்கபலமாக தனலட்சுமி அவர்களும் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த தினங்களுக்கு முன்னர் இவர் தான் சில ஹேஷ் டேக்களை உருவாக்கி தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் எனவும் புது ரூமர் கிளம்பி வருகிறது.
ஆனாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் இவர் தன்னுடைய ஹேர் கலரையும் ஹேர் ஸ்டைலையும் மாற்றியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ இவ்வளவு பிரச்சினையிலும் இது தேவையா” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.