பிக்பாஸ் வென்ற கையோடு அசீம் வெளியிட்ட முதல் பதிவு! என்ன சொல்லியிருக்கிறார்?
பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னராகியிருக்கிறார் சின்னத்திரை நடிகரான அசீம்.
யார் இந்த அசிம்?
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அசீம், 2008ம் ஆண்டு VJவாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார்.
பேச்சுதிறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற அசீமை தேடி சின்னத்திரை வாய்ப்பு வந்தது.
பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார், அடுத்ததாக பிரியமானவள் சீரியலில் பிரபாவாக பலரது மனதையும் கவர்ந்தார்.
தொடர்ந்து தெய்வம் தந்த வீடு, பகல்நிலவு தொடரில் நடித்தார், பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள அசீம் தயாரான போது அவரது தாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.
இதற்கு அடுத்ததாக மீண்டும் சின்னத்திரையில் நடித்து வந்த அசீமுக்கு, பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சர்ச்சையான போட்டியாளர்
நிகழ்ச்சி தொடக்கம் முதலே, போட்டியாளர்களுடன் வாக்குவாதம், சண்டை என பரபரப்பை கிளப்பினார் அசீம்.
மற்றவர்களை மதிக்காமல் பேசுகிறார், மனது புண்படும்படி பேசுகிறார் என கமெண்டுகள் வர, கமல்ஹாசனும் வார இறுதி நாட்களில் அசீமை கண்டித்தார்.
ரெட் கார்டு கொடுத்து தான் வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் ரசிகர்கள் பேசியது ஒருபுறம் இருக்க, அவரோ டைட்டில் வின்னராகியிருக்கிறார்.
சேனல் நிர்வாகம் ஏமாற்றிவிட்டது, எப்படி அசீம் வெற்றி பெற்றிருக்க முடியும்? இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
முதல் பதிவு
இந்நிலையில் பிக்பாஸ் டிராபியுடன் பதிவிட்டுள்ள அசீம், 11 நாமினேஷம், 1 ட்ராபி என்றபடி முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நீங்கள் இதற்கு தகுதியானவர் தான் என கமெண்டுகள் வந்தாலும், உங்களுக்கே இது ஓவராக தெரியவில்லையா? எனவும் திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.