funny viral video: எப்படா தாலிய கொடுப்பாரு... திருமணத்தில் ஐயர் பார்த்த வேலைய பாருங்க!
ஒரு திருமண நிகழ்வின் போது மணமகனை ஐயர் நகைச்சுவை நோக்கம் கருதி செமயாக கலாய்த்த காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
திருமண வீடு என்றாலே உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், இரு வீட்டாருக்கும் தெரிந்தவர்கள் என ஏராளமான நபர்கள் ஒரு இடத்தில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதால், மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

பொதுவாக திருமணங்களில் மணமகளின் தோழிகள் மணமகனை கிண்டல் செய்வதும், மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் நகைச்சுவையாக பேசுவதும் கலாய்ப்பதும் இயல்பு தான்.
ஆனால் இந்த திருமணத்தின் போது திருமணத்தை நடத்தி வைக்க வந்த ஐயர் மணமகனை கலாய்த்து வியர்க்க வைத்த, நகைச்சுவை காட்சிகள் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |