தப்பித்தவறியும் உணவு உண்டதன் பின்னர் இவற்றையெல்லாம் செய்யாதீங்க
உணவு உண்டதன் பின்னர் சிலருக்கு உறங்குவது மிகவும் பிடிக்கும். ஆனால், அதற்குப் பின் நெஞ்செரிச்சல், குறட்டை பிரச்சினை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உண்மையில் நாம் உணவு உண்டதன் பின்னர் அது சமிபாடடைய தேவையான நேரம் கொடுக்க வேண்டும்.
சரி இனி உணவு உண்டன் பின்னர் என்னென்ன விடயங்களை தவிர்க்க வேண்டும் எனப் பார்ப்போம்.
image - times now
குளித்தல்
நாம் உணவு உண்டதன் பின்னர் சமிபாட்டுக்கு உதவுவதற்காக ரத்தமானது நமது வயிற்றை சூழ்ந்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் குளிக்கும்போது, நமது உடலின் வெப்பநிலை மாறத் தொடங்கும். இதனால் ரத்தத்தின் பங்களிப்பு குறைவடைந்து செரிமானம் பாதிப்புக்குள்ளாகும்.
image - healthline
உடற்பயிற்சி
உணவு உண்டதன் பின்னர் உடற்பயிற்சி செய்வதென்பது ஜீரணத்துக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திவிடும். இதனால் வாந்தி, குமட்டல், வயிற்று வலி போன்ற ஏற்படும்.
image - healthline
தண்ணீர் பருகுதல்
உணவு உண்பதற்கு அரை மணிநேரத்துக்கு முன் அல்லது பின் தண்ணீர் அருந்தலாம். சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டு முடித்த உடனேயோ தண்ணீர் குடித்தால் அது செரிமானத்தை மெதுவாக்கும்.
புகை, மது
சாப்பிட்ட பிறகு புகைப்பிடித்தல், மது அருந்ததல் என்பன பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.