இரவானால் குறட்டை தொல்லை தாங்க முடியலையா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்
பொதுவாக நம்மில் சிலருக்கு தூங்கும்போது பலருக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கும்.
இந்த பழக்கத்தினால் அவர்களுக்கு சிலருக்கு வெளி இடங்களுக்கு சென்று நிம்மதியாக தூங்கக் கூட முடியாத நிலை இருக்கும்.
இதன்படி, தூக்கத்தில் ஏதாவது பிரச்சினை இருப்பவர்கள் இரவில் பலத்த ஒலியுடன் குறட்டை விடுவார்கள்.
இதனை தொடர்ந்து தூக்கத்தில் தடை ஏற்படுவதோடு, உடல் சோர்வு ஏற்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.
மேலும் குறட்டை விடும் பழக்கம் அதிகரித்து விட்டால் காலப்போக்கில் இதய நோய், ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
அந்த வகையில் குறட்டை விடும் பழக்கம் தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.
குறட்டை விடுபவர்களை சமாளிப்பது எப்படி?
தூக்கத்தில் ஏற்படும் தடை தான் குறட்டைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
இதனால் முறையான ஒரு மருத்துவ சிகிச்சை முக்கியத்துவம். மேலும் அதிகப்படியான சுமையை சுமப்பவர்களுக்கும் இந்த குறட்டை பிரச்சினை இருக்கும்.
மேலும், உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி மிகக் கடுமையாக குறட்டை விடுவார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் பகல் நேரம் தூங்கினாலும் இந்த பிரச்சினையை எதிர் நோக்குவார்கள்.
இதய நோய், உடல் இயக்கமற்ற நபர்கள், புகைப்பிடிக்கக் கூடியவர்கள் மற்றும் கவலையாக இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த பிரச்சினை இருக்கும்.
குறட்டை பழக்கம் அதிகரித்தால் என்ன நடக்கும்?
குறட்டையால் வரும் சத்தம் மற்றவர்களை தூங்க விடாமல் தொந்தரவாக இருக்கும்.
முறையான சிகிச்சை இல்லாவிட்டால் ஸ்டிரோக், இதய நோய் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.