உறங்கும் முன் இந்த பழங்களை சாப்பிட கூடாது
பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் பங்கெடுக்கின்றது என்றாலும் சில பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவது நன்மை தராது அது எந்தெந்த பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் சாப்பிடக் கூடாத பழங்கள்
உறங்கும் முன் அமிலத்தன்மை கொண்ட பழங்களை சாப்பிட கூடாது.
பொதுவாக தவிர்க்க வேண்டிய பழங்களாக சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லக்கூடிய ஆரஞ்சுகள், திராட்சை பழங்கள், எலுமிச்சை போன்ற பழங்கள் உறங்க முன் சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
இந்த பழங்களை உண்பதால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், தூக்கத்தில் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் நமது வயிற்றில் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் எனப்படும் நொதியம் உள்ளது. இதை இரவில் உட்கொண்டு விட்டு உறக்கத்தில் இருக்கும் போது இது சயற்பாடுகளின்றி குடலில் இருக்கும் இந்த சமயத்தில் இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதனால் வாயுப்பிரச்சனை வரலாம். நம்மில் பலரும் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு உண்போம் இரவில் உறங்கும் முன் உண்போம் ஆனால் இது தவறானது.
இதை தூங்குவதற்கு முன்பாக அதிகமாக சாப்பிட்டால் நமது ஆற்றல் கூடும். இதனால், தூங்குவதற்கு சிரமம் ஏற்படும். கூடுதலாக, சில நேரங்களில் வயிறு உப்புசம். அசவுகரியம் ஆகியவை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |