உடல் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் இலந்தை பழம்
உடல் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாம் நமது உடல் உள்ளுறுப்புகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் வைத்திருக்க வேண்டும்.
இதற்கு நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இலந்தை பழம் நமது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பழமாகும்.
இதில் 100 கிராம் இலந்தை பழத்தில், 74 சதவிகிதம் கலோரி, 17 சதவிகிதம் மாவுப்பொருள், 0.8 சதவிகிதம் புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துக்கள் இருக்கின்றன.
இது உடலுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இலந்தை பழம்
இந்த பழத்தில் வடை்டமின் ஏ சத்து மிகையாக காணப்படுகின்றது. இதனால் இது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
இரவில் உறக்கமின்றி இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல உறக்கத்தை தருவதுடன் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.
மனிதனால் ஜீரணிக்க முடியாத ஒரு பிரச்சனை தான் இந்த அஜீரண பிரச்சனை. இந்த பிரச்சனையை போக்குவதற்கு இதிலுள்ள வைட்டமின் சி மிகவும் உதவி செய்கிறது.
இது உடல் சூட்டையும் தணிக்க கூடிய பழமாகும். இளநரை வயதான தோற்றம் போன்றவற்றை இல்லாமல் செய்யும் சக்தி கொண்டது இந்த இலந்தை பழம்.
கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் கால்சியம் நிறைந்த இலந்தை, சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |