தம்பதிகளே... இந்த 5 விஷயத்தையும் மாத்திக்கோங்க
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறுவார்கள். அது அவர்கள் வாழ்ந்து காட்டுவதில்தான் உள்ளது.
வாழ்க்கையில் இன்பம், துன்பம், வலி, சுகம் என்பன மாறி மாறி வந்துபோகும். அது மட்டுமில்லாமல் வாழ்க்கை என்றுமே சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
அவ்வாறு பார்க்கும்போது புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள் மிகவும் இன்பமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பிக்கும்.
image - firstcry parenting
அது குடும்பத்தினரால் இருக்கலாம், அல்லது இவர்களுக்குள் சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். அதையும் மீறி பார்த்தால் பணப் பிரச்சினையாக இருக்கலாம்.
எல்லா விடயத்தையும் தீவிரமானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக எவற்றையெல்லாம் தீவிரமான பிரச்சினைகளாக எடுத்துக்கொள்ளலாம் என மனநல நிபுணர் மருத்துவர் சாந்தினி துக்நாயத் விளக்கியுள்ளார்.
சரி இனி அவற்றைப் பார்ப்போம்....
image - news18 hindi
அவமரியாதை - தம்பதியருக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், அதற்காக ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும்,மரியாதையும் என்றுமே குறைந்துவிடக் கூடாது.
எப்போதாவது உச்சக்கட்ட கோபத்தில் உங்களை அவமதிப்பது இயல்புதான். ஆனால், அதை வழக்கமாக தொடரக்கூடாது. அதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முரட்டுத்தனம் - கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி, வன்மையான சொற்களால் திட்டுவது. காரணமின்றி எப்பொழுதுமே கோபப்படுவது.
இது தம்பதியர் யாரிடம் இருந்தாலும் உடனடியாக கைவிட வேண்டும்.
image - kylie lepri councelling
தகவல் தொடர்பின்மை - எப்பொழுதுமே ஒரு உறவு ஆரோக்கியமானதாக அமைய உரையாடல் மிகவும் முக்கியமானது.
அந்த வகையில் தம்பதியரில் ஒருவருக்கும் இன்னொருவருடன் பேச விருப்பமில்லை என்றால் அது ஆபத்தின் அறிகுறியாகும்.
ஆர்வமில்லாமை - கணவன் மனைவி இருவருக்குமே திருமண வாழ்க்கையை கொண்டு செல்வதில் மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும. அந்த ஆர்வம் ஒருவருக்கு இல்லாவிட்டாலும் அது நல்லதொரு திருமண வாழ்க்கையாக இருக்காது.
பொறாமை - பொறாமை மனித இயல்பு என்றபோதிலும் தம்பதியருக்கிடையில் அது அதிகமானால் ஆபத்தில் சென்று முடிந்துவிடும்.
image - project hot mess