அடிக்கடி உங்களுக்கு மூட்டு வலியா? இனி இந்த உணவுகள் வேண்டாம்!
கீல்வாதத்தில், வீக்கம் மற்றும் வலி பிரச்சனைகள் காரணமாக மூட்டுகளில் வலி ஏற்படுகின்றது.
இவ்வாறானவர்கள் சில உணவுகளையும் பானங்களையும் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி அதிகமாகவே இருக்கிறது.
அந்தவகையில் நீங்கள் தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். மூட்டு வலி பிரச்சினையை இல்லாமல் செய்வதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகளில் அதீத கவனம் வேண்டும்.
இந்த விடயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டால் அது மூட்டு வலி உள்ளவர்களுக்கு இன்னும் தீவிரமடையுமே தவிர குறையாது.
தவிர்க்க வேண்டியவை
- உணவில் உப்பின் அளவைக் குறைத்தல்
- மது அருந்துவதை குறைத்தல்
- பதப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்த்தல்
- புளிப்பு மிக்க உணவுகளைத் தவிர்த்தல்
- கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ளல்
-
வாயு உணவுகளை தவிர்த்தல்
சேர்த்துக்கொள்ள வேண்டிய
உணவுகள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது வெந்தயம் கீரை வகைகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
நாளந்தம் உண்ணும் உணவில் புதினா, இஞ்சி, பெருங்காயம் என வாயுவை வெளியேற்றும் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.