காலை நேரத்தில் இந்த உணவுகளை தொட்டுக் கூட பாக்காதீங்க...
பொதுவாகவே ஒரு நாளை சிறந்த நாளாக மாற்ற காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அப்படி காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில உணவுகளை காலையில் சாப்பிடவேக் கூடாது மீறி சாப்பிட்டால் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படும்.
அவ்வாறு காலையில் நீங்கள் தவிர்கக வேண்டியவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலலாம்.
காபி அல்லது தேநீர்
பொதுவாகவே ஒரு சிலர் காலை நேரத்தை காபி அல்லது தேநீருடன் தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் காலையில் காபி அல்லது தேநீர் குடிக்க கூடாது. ஏனெனில் காபியில் நிறைந்து இருக்கும் காபின் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து வீக்கம் மற்றும் உடல் அசௌரியத்திற்கு வழிவகுக்கும். மேலும், காபின் மற்றும் டானின்கள் கொண்ட தேநீர் வயிற்றில் வாயு உருவாக காரணமாக இருக்கும். ஆகவே காலையில் காபியை குடிக்காமல் கொஞ்சம் தாமதமாக குடிக்க வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால் இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வயிற்றில் அதிகமான அமிலம் உற்பத்தியாகும் இதனால் வீக்கம், வாயு போன்ற பல அசௌரியங்கள் ஏற்படும். அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த இந்த பழங்களை காலை உணவு சாப்பிட்டப்பின் சாப்பிடுவது நல்லது.
தக்காளி
நாம் அன்றாட சமையலில் தக்காளிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. ஏனெனில் தக்காளியில் வெறும் அமிலம் தான் நிறைந்திருக்கிறது. இந்த ஆசிட் வயிற்றில் உள்ள அமில அளவுகளை அதிகரிக்கும். அதனால் உடலில் செரிமானப்பிரச்சினை சமநிலை சீர்குலைவு ஏற்படும்.
காரமான உணவுகள்
பொதுவாகவே நம்மில் சிலர் இந்த காரமான உணவுகளுக்கு அலாதி பிரியர்களாக இருப்பார்கள் ஆனால் உங்கள் காலை உணவில் காரமாக உணவுகளை எடுத்துக் கொண்டால் அந்த உணவுகளில் இருக்கும் அமிலம் கல்லீரல் சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் குடலை எரிச்சலடைய செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |