வைட்டமின் சி குறைபாடா? Limcee Vitamin C மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்யவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் Limcee.
நம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ளாத போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது, இதனால் நோய்கள் தொற்றிக்கொள்ளலாம்.
வைட்டமின் சி குறைபாட்டை போக்க பயன்படுத்தப்படும் Limcee மாத்திரைகள் இரும்புச்சத்தின் அளவையும் அதிகரிக்கிறது.
இதிலுள்ள Ascorbic அமிலம், உடலில் வைட்டமின் சி அளவை அதிகரிக்கும், மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுகளில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Ascorbic மற்றும் மருந்து கலவைகளில் உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவர்களிடம் தெரிவிக்கவும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் குழந்தைகள் எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, பாலூட்டும் தாய்மாராக இருந்தாலோ மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
வேறு ஏதேனும் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்காண்டாலும், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தினாலும் மருத்துவரிடம் கட்டாயம் தெரிவிக்கவும்.
எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
வைட்டமின் சி குறைபாட்டை போக்க Limcee மாத்திரைகள் பயன்படுத்தப்படும், ஸ்கர்வி குறைபாடுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
மாத்திரையை உடைத்தோ, பவுடராக்கியோ பயன்படுத்த வேண்டாம், முழு மாத்திரையாக தண்ணீர் பயன்படுத்தி விழுங்கி கொள்ளலாம் அல்லது உமிழ்நீரில் சிறிது சிறிதாக மென்று சாப்பிடலாம்.
நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைக்கவும்.
பக்கவிளைவுகள்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- அடிவயிற்றில் தொந்தரவு
- நெஞ்செரிச்சல்
இது பொதுவான பக்கவிளைவுகளே, இது தொடர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலோ மருத்துவரிடம் கட்டாயம் தெரிவிக்கவும்.
முக்கிய கவனத்திற்கு
Limcee மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹால் எடுத்துக் கொள்வது நல்லதன்று, மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் ஒழிய கர்ப்பிணிகள் மறந்தும் கூட Limcee மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும், இதனால் ஆபத்துகள் நேரிடலாம், இதேபோன்று தாய்ப்பாலூட்டும் பெண்களும் தவிர்ப்பது நல்லது.
சிறுநீரக நோயாளிகளும், குழந்தைகளும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு- எந்தவொரு மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்துகளை உண்டாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |