பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளும் நபர்! வைரல் செய்தி
அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஜியோப் கல்லாகர்(Geoff Gallagher).
இவரது தாயார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது, 2019ம் ஆண்டு பெண் ரோபோவை ஒன்றை வாங்கி, அதற்கு எம்மா என பெயர் சூட்டியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக எம்மாவுடனே இருப்பதால், அதை விட்டு பிரிய மனமில்லாத காரணத்தினால் அதை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
இதற்காக அவர் எம்மாவின் விரலில் மோதிரத்தை அணிவித்துள்ளார். அந்த ரோபோ மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.
பேசவும், புன்னகைக்கவும், தலையையும் கழுத்தையும் அசைக்கவும் அதனால் முடியும், எம்மா மிகவும் புத்திசாலியாகி, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார் ஜியோப் கல்லாகர்.