தங்கம் விலையில் மீண்டும் அதிரடி ஏற்றம் - சவரனுக்கு ரூ.1,720 உயர்வு!
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) 22 காரட் தங்கத்தின் விலை ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.215 அதிகரித்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,720 உயர்ந்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 18 காரட் தங்கம் விலை 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது.
ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,780-க்கும், ஒரு சவரன் ரூ.94,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 18 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.65 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரன் விலை ரூ.520 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |