தம்பதியினர் மறந்தும் “இத” செய்யாதீங்க- எச்சரிக்கும் சாஸ்த்திரம்
பொதுவாக காதலர்களாக இருக்கும் வரைக்கும் பெரிதாக கட்டுப்பாடுகள் இருக்காது.மாறாக அவர்கள் திருமணம் செய்து தம்பதிகளாக மாறும் பொழுது தமிழ் கலாச்சாரத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்த வகையில் தம்பதிகளாக வாழும் காலங்களில் குறிப்பிட்ட சில விடயங்களை செய்யக் கூடாது என அறிவியல்ஞானியொருவர் எச்சரித்துள்ளார்.
இப்படியான செயல்களால் தம்பதிகள் அவர்களின் வாழ்க்கையில் துர்பாக்கியவான்களாக வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில், தம்பதிகளாக இருக்கும் பொழுது என்னென்ன விடயங்களை மறந்தும் செய்யக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தம்பதிகளாக செய்யக்கூடாத விடயங்கள்
1. மகாபாரதத்தின் படி, தம்பதியினர் ஒரே தட்டில் சாப்பிடக்கூடாது. இது போதைக்கு சமமான செயல் என்றுக் கூறப்படுகின்றது. காதலர்களாக இருக்கும் காலத்தில் இருந்தது போல் அல்லாமல் கணவர் சாப்பிட்ட பின்னரே மனைவி சாப்பிட வேண்டும்.
2. சாஸ்த்திரத்தின் படி, தம்பதிகள் ஒன்றாகக் குளிக்கக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. புராணக்கதைகளில் தீர்த்த யாத்திரை சென்றாலும், ஒன்றாக நதியில் குளிக்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது. இதனை எமது முன்னோர்கள் கடைபிடித்தார்கள். தற்போது கலாச்சார மாற்றங்களினால் இப்படியான சாஸ்த்திரங்கள் அழிந்து கொண்டு வருகின்றன.
3. கணவர் தாமச பூஜை செய்தால், மனைவி அதில் பங்கேற்கக்கூடாது. அத்தகைய பூஜைகள் ஆண்களுக்கு மட்டுமே உரியது. அதில் இருக்கும் இறைச்சி, மதுபானம் ஆகிய பொருட்களை மனைவிமார்கள் தொடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுவொரு சாஸ்த்திரமாக அக்காலம் முதல் செய்து வருகிறார்கள். தற்போது இருப்பவர்களும் பின்பற்றினால் சிறந்த பலன் கிடைக்கும்.
4. பெண்களுக்குத் தடைசெய்யப்பட்ட இடங்களுக்கு, கணவருடன் கூட மனைவி செல்லக்கூடாது. இது அவமானகரமானதாகவும், சங்கடமானதாகவும் இருக்கும். சிலர் கலாச்சார மாற்றங்கள் காரணமாக ஆண்கள் செல்லும் இடங்களுக்கு மனைவிகளையும் அழைத்து செல்கிறார்கள். இது சில சமயங்களில் இருவருக்கும் பிரிவை கூட ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).