உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருக்கா? அப்போ இந்த உணவுகளை எல்லாம் தொட்டுக் கூட பாக்காதீங்க
வயது வித்தியாசம் இல்லாமல் தாக்கும் நோய்களில் இந்த ஆஸ்துமா நோயும் ஒன்றாகும். ஆஸ்துமா பிரச்சினையானது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோயாகும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீங்கி இருக்கும். சுவாசப்பாதைகள் சுருங்கி, வீங்கி கூடுதல் சளியை உருவாக்கி இயல்பாக சுவாசிப்பதை கடினமாக்கும் ஒரு நிலையே ஆஸ்துமா.
இந்த நோய் ஒரு சிலருக்கு சிறிய பிரச்சினையாகவும் ஒரு சிலருக்கு பெரிய பிரச்சினையாகவும் இருக்கும். மேலும், இது உயிருக்கு ஆபத்தைக் கூட ஏற்படுத்தும்.
இந்த நோய் பரம்பரை காரணமாகவும் ஒவ்வாமைக் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படுகிறது.இதன் விளைவாக மூச்சுத்திணறல், இருமல், மார்பு இறுக்கம் போன்றவை தான் இந்த நோய்க்கான அறிகுறி.
மேலும், சிகரட்புகை, காற்றில் இருக்கும் மாசு, காலநிலை மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றாலும் இந்த ஆஸ்துமா பிரச்சினை ஏற்படுகின்றது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- குளிர்ச்சியான உணவுகள்
- பால் அல்லது பாலில் செய்யப்பட்ட உணவுகள்
- மது அருந்தக் கூடாது
- பொறித்த இறைச்சி வகைகள்
- பதப்படுத்தப்பட்ட இனிப்பு உணவுகள்
- பூண்டு
- மீன்
- துரித உணவுகள்
- கருவாடு
- எலுமிச்சை
- குளிர்பானங்கள்
- கத்திரிக்காய்
- வாழைப்பழம்
- பருப்பு வகைகள்
- நெல்லிக்காய்
எவ்வாறு தவிர்ப்பது?
வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
வீடு, அலுவலகம், சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குப்பை, தூசி, அழுகிய உணவுப் பொருட்கள் இருப்பின் உடனடியாக சுத்தப்படுத்தி விட வேண்டும்.
வாகனங்களில் வெளியில் செல்லும் போது முகத்திற்கு மாஸ்க் அணிய வேண்டும்.
வாசனைத் திரவியங்கள் அதிகம் பயன்படுத்தக் கூடாது.