சர்க்கரை நோயாளிகளே… உங்களுக்கு சத்தான கம்பு சாம்பார் சாதம் செய்வது எப்படினு தெரியுமா?
கம்பு சாம்பார் சாதம் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடும் உணவு.
வெறும் நான்கே நான்கு விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். சர்க்கரை நோயாளிகளும் ஆரோக்கியமான வாழ்க்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் தோசை சுட்டுச் சாப்பிடும்போது, உங்களுக்கு மட்டும் கோதுமை உப்புமான்னா கொஞ்சம் சலிப்பாதான் இருக்கும்.
30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி! 12 ராசிக்காரர்களுக்குமான அதிர்ஷ்ட பலன்கள்
ஆனால், என்ன செய்வது சர்க்கரைநோய் வந்துவிட்டால் வாயைக்கட்டித்தானே ஆகணும்.
அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு.
இன்று சக்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடும் கம்பு சாம்பார் சாதம் செய்முறையை பார்க்கலாம்.
நிஜத்தில் பலி வாங்க வந்த பெண் நாகினி...ஜோடியை கொன்றவரை 7 முறை பலி தீர்த்தும் உயிர்பிழைத்த அதிசயம்!
தேவையான பொருட்கள்
- கம்பு - ஒரு கப்
- துவரம்பருப்பு - அரை கப்
- மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
- மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
பர்ஸில் பணம் சேர்ந்துகிட்டே இருக்க இந்த ஒரே ஒரு பொருளை வையுங்கள்!
தாளிக்க
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.
குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.