60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர்! முதல் மனைவி என்ன சொல்லியிருக்கிறார்?
பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி அசாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை தனது 60வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
11 மொழிகளில் 200க்கும் மேற்பட்டங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆஷிஷ் வித்யார்த்தி, வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல விருதுகளை வென்றுள்ளார்.
தற்போது 60 வயதான நிலையில் ரூபாலி பருவா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நேற்று முதல் வைரலாகி வந்தது, சிலர் நேர்மறையாகவும், பலர் எதிர்மறையாகவும் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இவரது முதல் மனைவியான ராஜோஷி பருவா இன்ஸ்டாகிராமில், சரியான நபர் ஒருவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க மாட்டார், உங்கள் மனம் புண்படும்படியும் நடக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும், அதீத சிந்தனையும் சந்தேகமும் உங்கள் மனதிலிருந்து அகலட்டும், அமைதியான வாழ்க்கையை வாழுங்கள், நீங்கள் வலிமையான நபர், உங்களுடைய ஆசிர்வாதங்களை பெறுவதற்கு சரியான நேரம் இதுவே, அதற்கு தகுதியானவர் தான் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக Hindustan Timesக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரு நடிகையாக நான் நினைத்ததை செய்தேன், என்னை யாரும் தடுக்கவில்லை, காலங்கள் செல்ல செல்ல எங்கள் இருவரது பாதையும் வேறு வேறு என்பதை உணர்ந்து கொண்டோம்.
அவருடைய கனவுகளை நிறைவேற்ற அவருக்கு முழு உரிமையும் உண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம், எங்கள் மகனும் வளர்ந்து விட்டார், வெளிநாட்டில் வசித்து வருகிறான்.
எங்களுக்குள் எந்தவொரு சண்டையோ, மனக்கசப்போ இல்லை, வழக்கறிஞர் கூறிய படி எந்தவொரு சங்கடமும் இல்லை.
அவரவர் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம், எனது தனிப்பட்ட வாழ்வில் எனக்கென்று தேவைகளும் இருக்கிறது, அவர் ஒருபோதும் என்னை ஏமாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.