நான் என்ன பண்ணிட்டேன்? கமலிடம் அசல் கேள்வி! கண்கலங்கி நிற்கும் நிவா
பிக்பாஸ் வீட்டில் அசல், மகாலட்சுமி, அசீம் மூன்று பேர் டேஞ்சர் நிலையில் காணப்படும் நிலையில், நிவா கண்கலங்கியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்களிடையே கடும் சண்டை நிலவியது.
அசீம் கடந்த வாரம் கடுமையாக நடந்து கொண்ட நிலையில், இந்த வாரம் நம்பிக்கை இல்லாமல் இறுதி நிலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
நான் என்ன செய்தேன்?
தற்போது டேஞ்சர் நிலையில், மகாலட்சமி, அசல், அமீர் மூன்று பேர் உள்ள நிலையில், அசல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நிவா கூறியுள்ளார்.
மேலும் அவர் கண்கலங்கவும் செய்த நிலையில், கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று எவிக்ஷன் கார்டை காட்டியுள்ளார்.