இலங்கையில் பதற்றம்! கண்ணீர் புகை வீச்சால் பதறியடித்து ஓடும் மக்கள்
மூன்றாம் இணைப்பு
இலங்கையில் ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே மரக்கட்டைகளுக்கு தீ வைத்துள்ளதாகவும், இதனால் வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இலங்கையில் இணையவசதிகளும் முடக்கப்பட்டுள்ளது.
அந்த சம்பவம்... கண்கலங்கியபடி பேசிய கிறிஸ் ராக்- எழுந்து நின்று கைதட்டிய ரசிகர்கள்
முதல் இணைப்பு
இலங்கையில் ஜனாதிபதியின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தொடருகின்றது.
கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டு நள்ளிரவு முதல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியியில் அரசாங்கம் தொடர்பாக பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் கொழும்பின் பல பகுதிகளை சேர்நத மக்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.