உண்மையில் ஏடிஎம்மில் 500 ரூபாய் நோட்டுகள் இருக்காதா? விளக்கம் இதோ
தற்போது சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்ஆப் பதிவின் மூலம் ஏடிஎம்மில் 500 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படுகின்றது என தகவல் வெளியாகி உள்ளது.
ரூ. 500 நோட்டுகள்
ரூ.500 நோட்டுகள் குறித்து வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் சமீப காலமாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 31, 2026க்கு பிறகு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாது என்றும், மக்கள் அவற்றை வங்கியில் மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை.

மத்திய அரசின் செய்தி பிரிவான PIB, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், அவற்றை தடை செய்யும் எந்தத் திட்டமும் ஆர்பிஐக்கு இல்லை என்றும் அறிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வங்கி மற்றும் நிதி தொடர்பான தகவல்களுக்கு சமூக வலைதளங்களை நம்பாமல், ரிசர்வ் வங்கி மற்றும் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வதந்தியை நம்பி 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை.
பிஐபி உண்மை சரிபார்ப்பு செய்து, இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்கு அல்லது நம்புவதற்கு முன், அரசு வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகளை நம்ப வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |