கையில் தம்பி பாப்பாவுடன் அர்ச்சனாவின் மகள்! வைரலாகும் வீடியோ
பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான அர்ச்சனா பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் என்றே கூறவேண்டும்.
அன்பு கேங்க் ஒன்றை உருவாக்கி, அனைவரது முயற்சியையும் திறமையையும் வீணடித்துவிட்டார் என இன்றளவும் பிக்பாஸ் ரசிகர்கள் அர்ச்சனாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ-வுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இவரது மகள் சாரா, கையில் தம்பி பாப்பாவுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது, அர்ச்சனாவின் தங்கை அனி எனும் அனிதாவின் குழந்தையை சாரா கையில் வைத்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நட்சத்திரங்கள் பங்கேற்று சிறப்பித்த அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு கோலாகலமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.