வீட்டில் அரக்கீரை இருக்கா? இப்படி ஒரு முறை தொக்கு செய்ங்க..சாப்பிடாம இருக்க மாட்டீங்க
மதிய சாப்பாட்டை சிம்பிளா முடிக்க நினைக்கிறீர்களா? அரைக்கீரை எப்போதும் சாதாரணமாகச் செய்துவிட்டீர்களா? இந்த முறை சற்று வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்ய நினைத்தால், அரைக்கீரை தொக்கு நல்ல தேர்வு.
கீரையை விரும்பாதவர்கள் கூட, இந்த பக்குவத்தில் சாப்பிட்டால் சுவை மாறி சாப்பிடத் தயங்க மாட்டார்கள்.
சூடான சாதத்துடன் சேர்த்தால் ருசி வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதை செய்யும் முறை பற்றி பார்கடகலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு
- வெங்காயம் - 1
- பூண்டு - 5-6 பல்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தொக்கு செய்வதற்கு
- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் - 5
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- அரைக்கீரை - 1 கட்டு
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது)
செய்யும் முறை
வெங்காயம், பூண்டு, மிளகாய் – மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
புளி – சிறிது நீரில் கரைத்து வைக்கவும்.
அரைக்கீரை – பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் 1 Tbsp ஊற்றி சூடாக்கி,
கடுகு 1 tsp,
சீரகம் ½ tsp,
வெந்தயம் 5,
பெருங்காயத்தூள் – சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறவும் (5 நிமிடம்).
அதில் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.
புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, புளி வாசனை போனதும், தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கவும். இதை சூடான சாதத்துடன் பரிமாறச் சுவை அருமையாக இருக்கும். வேண்டும் என்றால் மோர்மிளகாயும்,அப்பளமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |