மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான்- சாயிரா- சாமியார் மடத்தில் நடப்பது என்ன?
ஏ.ஆர்.ரகுமான்- சாயிரா பானு தம்பதிகள் மீண்டும் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான்
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பணியாற்றி வரும் ஈமான், ஜிவி பிரகாஷ் ஆகியோர் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியொரு சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏ.ஆர் ரகுமான் அவருடைய காதல் மனைவி சாய்ராவை பிரியப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இவர், தென்னிந்திய சினிமாவில், மூத்த இசையமைப்பாளராக, மிகச்சிறந்த மனிதனாக திகழ்ந்து வந்தார். பல மேடைகளில் இவர் மனைவி மீதுள்ள காதலை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தார்.
மீண்டும் இணையப்போகிறார்களா?
இந்நிலையில், நேற்றைய தினம் ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன்னுடைய கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த சில மாதங்களாகவே ரகுமான் மற்றும் சாய்ரா இடையே உணர்ச்சி பூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்ததாகவும். இந்த சூழலில் சாய்ரா கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிட்டிருக்கிறது என்றும் ரகுமானை பிரிந்து அவர் வாழ உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் ரஹ்மான் - சாயிரா பற்றி சர்ச்சையான கருத்துக்கள் அதிகரித்து வருவதால் இவர்கள் இருவரும் மீண்டும் தம்பதிகளாக இணைந்து வாழப்போவதாக அந்தணன் பேசியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் வீடு கோடம்பாக்கத்தில் சாமியார்மடம் பகுதியில் உள்ளது என்பதால் அந்த வீட்டில் மீண்டும் குடும்பமாக வாழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
“அவர் வாய் முகூர்த்தம் பலித்து ஆதர்ஷ தம்பதி இருவரும் ஒன்றிணைந்து அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்ற உலக உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளட்டும்..” என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |