Siragadikka Aasai: 2 லட்சத்திற்கு ஆசைப்பட்டு 5 லட்சம் கடனாளியாகிய விஜயா... அம்பலமாகிய உண்மை
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வழக்கறிஞரிடம் வாங்கிய பணத்தைக் குறித்த உண்மை முத்துவிற்கு தெரியவந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினியின் சதி வேலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வழக்கறிஞரிடம் விஜயா வாங்கி வைத்திருந்த பணத்தை ரோகினி திருடியுள்ளார்.
தற்போது அந்த திருட்டு பழி மீனா மீது விழுந்துள்ளது. இதனால் குடும்பத்தில் மேலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் முத்து பணத்தை குறித்து விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது.
அந்த பணம் சத்யா கைது செய்த போது வழக்கறிஞர் கொடுத்தது என்ற உண்மையை விஜயாவின் தோழி முத்துவிடம் உடைத்துள்ளார்.
இதனை முத்து வீட்டில் வந்து கூறிய நிலையில், அண்ணாமலை கோபத்தில் கொந்தளித்து, முத்து கடன்பட்ட 5 லட்சத்தை விஜயா தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |