என் வழியில் கிளீனா போயிட்டு இருக்கேன்! இளையராஜா வெளியிட்ட உற்சாக காணொளி
,இசைஞானி இளையராஜா உற்சாகத்துடன் வெளியிட்ட காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
இசைஞானி இளையராஜா
கோலிவுட்டில் இசை ஜாம்பவனாக இருக்கும் இளையராஜா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியில் அவர் பேசியுள்ளது என்னவெனில்,“வணக்கம். என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் தினமும் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற செய்தியை வேண்டியவர்கள் மூலமாக கேள்விப்படுகிறேன்.
நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பது என் வேலை. என் வழியில் ரொம்ப கிளீனா, சுத்தமா போய்க் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்னை வாழ்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன்.
இங்கே பட இசையில் கவனம் செலுத்திக்கொண்டும், இடையில் விழாக்களுக்கு சென்று கொண்டிருந்தபோதிலும், ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்துவிட்டேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.
பாடலா? இசையா?
இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கு நீதிபதி “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், இதற்கு சூசகமாக தனது கருத்தினை காணொளி மூலம் வெளியிட்டுள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |