அடிபட்ட கையோடு ரேம்ப் வாக் வந்த ஐஸ்வர்யா ராய்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்
கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்வதற்காக அடிபட்ட கையோடு வந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், ரெட் கார்பெட்டில் ரேம்ப் வாக் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என்ற பட்டத்தை பெற்றதுடன், இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பின்பு சல்மான் கானுடனான காதல் தோல்விக்கு பின்பு அபிஷேக் பச்சனைக் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதுடன் இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.
ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்த ஆண்டு அடிபட்ட கையோடு கேன்ஸ் விழாவிற்கு சென்றுள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
ஐஸ்வர்யா ராய் கடந்த 20 ஆண்டுகளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வித்தியாசமான உடைகளுடன் மேடையை அலங்கரித்து வருகின்றார்.
மகளுடன் அடிபட்ட கையோடு சென்ற ஐஸ்வர்யா ராய் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் அதோடு கேன்ஸ் பட விழாவின் ரெட் கார்பெட்டில் அழகிய ஏஞ்சலாக ரேம்ப் வாக் வந்துள்ளார்.
கருப்பு நிற பீகாக் கவுன் அணிந்து அவர் ரேம்ப் வாக் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.