வில் ஸ்மித் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்!
வில் ஸ்மித் சர்ச்சைக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பதில் கொடுத்துள்ளார்.
ஆஸ்கர் விருது விழா இந்த ஆண்டு சர்ச்சையுடன் நிறைவடைந்தது.
ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் அடித்த காமெடியில் கடுப்பான வில் ஸ்மித், அவரை ஆஸ்கர் மேடையிலேயே அறைந்தார்.
முதியவர் பாடிய முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்!

இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவான நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட வேறு எந்த அகாடமி நிகழ்சியிலும் கலந்து கொள்ள ஸ்மித்துக்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை என கருத்து தெரிவித்துவிட்ட நிலையில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அமைதி காத்து வந்தார்.

கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்ட அவர், இந்த சர்ச்சை குறித்து தன்னுடைய பார்வையை தெரிவித்துள்ளார்.
வில் ஸ்மித்துடனான புகைப்படத்தை காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரகுமான், வில் ஸ்மித் ஒரு ஸ்வீட் ஹார்ட் எனக் கூறியுள்ளார்.
வீடு புகுந்து இளம்பெண்ணை திருமணம் செய்யுமாறு மிரட்டிய தயாரிப்பாளர்...என்ன நடந்தது தெரியுமா?
ஆஸ்கர் நிகழ்வு குறித்து கேட்கப்பட்டபோது, சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னுடைய இசைப்பயணத்தில் ஊக்குவித்தவர்களையும் ரகுமான் நினைவு கூர்ந்தார்.