வீடு புகுந்து இளம்பெண்ணை திருமணம் செய்யுமாறு மிரட்டிய தயாரிப்பாளர்...என்ன நடந்தது தெரியுமா?
வீடு புகுந்து இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்படுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தயாரிப்பாளரும், இயக்குனருமான வராகி (46) வசித்து வருகிறார்.
ஐஸ்வர்யா தான் உதவியாக உள்ளார்! முதல்முறையாக தனுஷ் ஓபன் டாக்
அதே குடியிருப்பில் 31 வயதான இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசிக்கிறார்.
அந்த இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு வராகியிடம் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காமல் இளம்பெண் வேலையை விட்டு விலகியதாக தெரிகிறது.
இரண்டாவதாக திருமணம் செய்யுமாறு மிரட்டல்
இந்த நிலையில் ஏற்கனவே திருமணமாக வராகி, அந்த இளம்பெண்ணிடம் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஏழரை சனியின் பார்வையில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை இந்த ஒரே ஒரு பொருளை கழுத்தில் அணியுங்கள்!
இதற்கிடையே நேற்று காலை இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற தயாரிப்பாளர் இளம் பெண்ணிடம் “என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்“ இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் இளம் பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பொலிஸில் முறைபாடு கொடுத்துள்ளார்.
உடனே வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டிய தயாரிப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.