அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்: வருத்தத்தில் ரசிகர்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகின்றனர்.
இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றார்.
ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ‘ஜீனி’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |