தோல் நோய்களுக்கு மருந்தாகும் நன்னாரி சர்பத் தயாரிப்பது எப்படி? கர்ப்பிணிகளுக்கு ஆபத்து
பொதுவாக கோடைக்காலங்களில் தென்னிந்தியாவில் உள்ளவர்கள் நன்னாரி சர்பத் குடிப்பார்கள்.
இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாகும். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.
அத்துடன் சபோனின், பிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், பினோலிக் காம்பௌண்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்களும் உள்ளன. இதனை குடிக்கும் ஒருவருக்கு ஆக்சிஜனேற்ற அழுத்தம் குறைந்து பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது.
மேலும், சபோனின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் தோலில் உள்ள நச்சுக்களுடன் கலந்து சொரியாசிஸ் போன்ற நோய்களை குணமடையச் செய்யும். நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளதால் நன்னாரி பல ஆண்டுகளாக தொழு நோய் மற்றும் சிபிலிஸ் நோய் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு நன்மைகளை செய்து வரும் நன்னாரி சர்பத் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
நன்னாரி சர்பத்
தேவையான பொருட்கள்
- நன்னாரி - 1/2 கப்
- தண்ணீர் - 2 கப்
- எலுமிச்சை பழ சாறு- 2 கரண்டி
- ஊறிய சியா விதைகள்- 3 கரண்டி
- ஐஸ் கட்டிகள்- 4
செய்முறை
ஒரு பவுலில் நன்னாரியை ஊற்றி, தண்ணீர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
அதன் பின்னர் வெட்டி வைத்திருக்கும் எலுமிச்சை பழத்திலுள்ள சாற்றை மாத்திரம் நன்னாரியின் மேல் ஊற்றவும். அதனுடன் கொஞ்சமாக ஊற வைத்திருக்கும் சியா விதைகள் கொஞ்சமாக கலந்து கொள்ளவும்.
தயார் நிலையில் இருக்கும் நன்னாரி சர்பத் மேல் ஐஸ்க்கட்டிகள் போட்டு குடித்தால் சுவை நன்றாக இருக்கும். சர்க்கரை சேர்க்காமல் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் குடிக்கலாம்.
நன்மைகள்
1. நன்னாரி சர்பத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதிப்புகளை தடுக்கிறது.
2. ரத்தத்தை சுத்திகரிக்கும் பானமாக பார்க்கப்படும் நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
3. சரும பாதிப்புக்கள் உள்ளவர்கள் நன்னாரி சர்பத் செய்து குடிக்கலாம். இதனால் சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும்.
4. கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்தி, பக்க விளைவுகளை கட்டுக்குள் வைக்கும். அதிக அளவு குடித்தால் அதிலுள்ள சபோனின் வயிற்றில் எரிச்சல் அல்லது புண்களை ஏற்படுத்தும்.
5. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் நன்னாரி சர்பத் குடிக்கலாம். அதே சமயம் சர்க்கரை வியாதியுள்ளவர்களும் சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |