இன்னும் இருந்தா தெரிஞ்சிருக்கும்.. எவிக்னேஷனில் வெளியேறிய அப்சரா இப்படி சொன்னாரா?
பிக்பாஸ் சீசன் 9 ல் இரண்டாவது வாரம் குறைவான வாக்குகளால் வெளியேறிய அப்சரா முதல் தடவையாக வெளியிட்ட காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.
அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
அப்சரா இப்படி கூறினாரா?
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியேறிய அப்சரா வெளியில் வந்த பின்னர் மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து விட்டு ஒரு காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “இரண்டு வாரங்களாக எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி, கடந்த வாரமும் என்னை காப்பாற்றுவதற்காக வாக்களித்து இருந்தீர்கள். இன்னும் இரண்டு வாரங்கள் என்னை காப்பாற்றியிருந்தால் அப்சரா யார் என்பது தெரிந்திருக்கும்..” என பேசியிருந்தார்.
அவரின் காணொளிக்கு பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |