பார்கவியுடன் திருமணம், அன்புக்கரசியுடன் தல தீபாவளி கொண்டாட்டமா? சீரியலில் நடக்கவிருக்கும் டுவிஸ்ட்
எதிர்நீச்சில் சீரியல் தர்ஷன் பார்கவியை போராடி திருமணம் செய்து கொண்டு, அன்புக்கரசியுடன் தலதீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில், தர்ஷன் திருமணத்தில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் வந்தன. ஆனாலும் கடைசியாக தர்ஷன் அவருடைய காதலியான பார்கவியை கரம்பிடித்து விட்டார்.
இதற்கிடையில், அறிவுக்கரசி- குணசேகரன் செய்த அனைத்து குற்றங்களும் அனைவருக்கும் தெரியவருகிறது.
குணசேகரனின் வீராப்புக்கு ஆதரவாக நின்று தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என போராடிய அறிவுக்கரசி கொலை பலியுடன் சிறைக்கு போய் விட்டார்.
அடுத்து, வீட்டிற்கு வந்த குணசேகரன் அலுமாரியில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்குள்ள ஆதாரங்களை சக்தி எடுத்து விட்டார்.
தலதீபாவளி யாருடன் தெரியுமா?
இந்த நிலையில், வீட்டிற்கு வந்த புது மருமகளை வீட்டிலுள்ளவர்கள் நடத்தும் விதம் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
புது ஆடை அணிந்து தர்ஷன்- பார்கவி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கரிகாலன் பேசிய விதம் புது தம்பதிகள் உட்பட வீட்டிலுள்ளவர்களை அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொங்கிய பார்கவி, “எல்லோரும் வாயை மூடுங்க..” என சத்தமாக கத்துகிறார்.
இப்படியொரு புறம் வீட்டில் கலவரம் நடந்து கொண்டிருக்கையில், அன்புக்கரசியுடன் தர்ஷன் தல தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த காணொளிகளை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “ இது என்ன புது டுவிஸ்ட்டா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |