அசத்தலான விலையில் iPhone 14 சீரீஸ் வெளியீட்டு தேதி லீக் ஆனது.. விலை என்ன?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் அடுத்த மாடலான ஐபோன் 14 சீரியஸை இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் அறிமுகப்படுத்தலாம் எனக்கூறியுள்ளது.
அதன்படி ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் வேகமான ரேமைப் பெறப் போகிறீர்கள் என தெரிவித்தாலும், போனின் செயல்திறனும் வேறு நிலையை எட்டியுள்ளது.
ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் சிறந்த மற்றும் புதிய மேம்படுத்தல்களைப் பெறப் போவதாகத் தோன்றினாலும், ஐபோன் 14 இன் மற்ற மாடல்கள் குறைந்த மேம்படுத்தல்களுடன் வரும்.
மேலும், ஐபோன் 14 சீரீஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யலாம் ஐபோன் 14 சீரீஸின் ப்ரீ-ஆர்டர்களை பொறுத்தவரை, அது செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஷிப்பிங் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தேதிகள் அனைத்துமே ஆப்பிள் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

விலை என்ன இருக்கும்?
iPhone 14 மாடலின் விலை நிர்ணயம் ஆனது iPhone 13-ஐ போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 14 மாடலின் பேஸிக் வேரியண்ட் ரூ.79,900 விலையில் நிர்ணயம் செய்யப்படலாம்.

ஐபோன் 13-ஐ போலவே ஐபோன் 14 மாடலும் குறைந்தபட்சம் 128GB என்கிற ஸ்டோரேஜை வழங்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
இதில், அதிகபட்சமாக 1TB வரை மெமரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில், 1டிபி என்கிற இன்டர்னல் ஸ்டோரேஜை பெறும் முதல் ஐபோன்களாக 14 சீரீஸ் மாடல்கள் திகழும்.