சுகர் ஏறி விட்டதா? அப்போ தண்ணீர்ல இதை கலந்து சாப்பிடுங்க
பொதுவாக நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றதோ அந்தளவிற்கு தீமைகளும் இருக்கின்றது.
அந்த வகையில் ஆப்பிள் சீடர் வினிகர் குறித்த பல தவறான செய்திகள் கேள்விப்பட்டிருப்போம். அதில் எவ்வளவு தீமைகள் இருக்கின்றதோ அந்தளவிற்கு நன்மைகளும் இருக்கின்றது.
சந்தைகளிலிருந்து கிடைக்கும் ஆப்பிள் பழங்களை மசித்து, அதை புளிக்க வைத்து, பின்னர் வடிகட்டி எடுக்கப்படுவது தான் ஆப்பிள் சீடர் வினிகர்.
இந்த வினிகரை தனியாக எடுத்து கொள்ளாமல் தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து ஆப்பிள் சீடர் வினிகர் குறித்து யாமறியாத சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.
1. உடல் எடை குறைப்பு
எடையை குறைக்க வேண்டும் என முயற்சிகள் செய்து கொண்டு இருப்பவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
இதனை கடந்த 2018ஆம் ஆண்டு “ஹார்வார்டு பல்கலைக்கழகம்” ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்துள்ளது. இந்த பரிசோதனையில் சுமார் 175 குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. நீரிழிவு
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள் பெண்கள் என இருபாலாருக்கும் இருக்கும் நோய்களில் சர்க்கரை நோய் முதல் இடத்தை பிடிக்கின்றது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் உணவுகளை சந்தையில் தேடி தேடி வாங்குகிறார்கள்.
அந்த வகையில் வினிகர் எடுத்துக் கொள்வதால் இன்சுலின் சுரப்பு அதிகமாகும் இதனால் எதிரொலியாக ரத்த சர்க்கரை கட்டுப்படுகின்றது. அத்துடன் இதய நோய்களையும் இது வரவிடாமல் தடுக்கின்றது.
3. புற்றுநோயை கட்டுபடுத்தும்
ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்து கொண்டால் புற்றுநோய் வராது என கூறுவார்கள். ஆனால் இது உண்மையல்ல. சிகிச்சையில்லாமல் வெறுமனே வினிகரை நம்பியிருப்பது முற்றிலும் தவறான விடயம்.
கட்டுக்கதைகள்
ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிட்டால் தீராத பல நோய்கள் தீரும் என பல கதைகள் கூறுவார்கள்.
மாறாக வினிகர் ஒரு அளவு தான் எடுத்து கொள்ள வேண்டும் அளவிற்கு மீறினால் உடலில் பொட்டாசியம் அளவுகள் குறைத்து விடுகின்றது.