Appala Kuzhambu: அசத்தல் சுவையில் அப்பள குழம்பு... வெறும் 10 நிமிடம் போதும்
பொதுவாகவே அப்பளத்தை உணவுகளில் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் அந்தப் அப்பளத்தை வைத்தே குழம்பு செய்யலாம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியந்திருக்காது.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் அப்பளத்தை வைத்து அசத்தல் சுவையில் எளிமையான முறையில் அப்பளக்குழம்பை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொரித்த அப்பளம் - 5
புளி - சிறிது
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு பல், சேர்த்து வதக்கி பொன்நிறமான மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் சாம்பார்தூள் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளி கரைசலை சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
அதனையடுத்து பொரித்து வைத்துள்ள அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து, அந்த குழம்பில் போட்டு ஒரு நிமிடம் வரையில் வேகவிட்டு இறக்கினால் அருமையான சுவையில் அப்பளக்குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |