ஐஸ்வர்யா ராய் தெரியும், யார் இந்த அபூர்வா ராய்?
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், அபூர்வா ராய் என்ற பெயரை நீங்கள் கேள்விபட்டதுண்டா?
சில வேளைகளில் நீங்கள் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். அபூர்வா ஓர் மாடல் அழகி, பல்கேரியாவில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான திருமதி பிரபஞ்ச அழகிப் போட்டியில் அபூர்வா ராய் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்கின்றார்.
2023ம் ஆண்டு திருமதி பிரபஞ்ச அழகி போட்டி ஆரம்பமாகவுள்ள உள்ள நிலையில் அபூர்வ பல்கேரியா பயணித்துள்ளார்.
அபூர்வா ஓர் வர்த்தகர், மாடல் அழகியாவார். கடந்த 2022ம் ஆண்டில் நடைபெற்ற திருமதி தென் பசுபிக் ஏசியா அழகிப பட்டத்தை வென்றிருந்தார்.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னா அபூர்வ ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் மிக இள வயதிலேயே தாம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக கூறியிருந்தார்.
அபூர்வாவிற்கு மூன்று வயது ஆண் குழந்தையொன்று உள்ளது. அபூர்வ அழகுசாதனம் தொடர்பான தொழிற்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.
அழகிய தோற்றமுடைய அபூர்வ தனது பதில்களினால் அறிவாற்றலை பறைசாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றார்.
நம்பிக்கையுடன் பெண்கள் வாழ்க்கையை எதிர்நோக்க வேண்டும் என்பதனை அபூர்வா ஊக்குவித்து வருகின்றார்.
அபூர்வா புதிய மற்றும் பழைய தாய்மாருக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
தோல் பராமரிப்பு நிலையமொன்றை நடாத்திச் செல்லும் அபூர்வா, தற்பொழுது திருமதி பிரபஞ்ச அழகி பட்டம் வென்றெடுப்பதனை இலக்காக கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.