அனுஷ்கா வருங்கால கணவரை அறிமுகப்படுத்தினாரா..யார் இவர்? வைரல் காணொளி
நடிகை அனுஷ்கா ஒரு நபருடன் தோளை பிடித்து மேடையில் நடந்து வந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்காவிற்கு தற்போது 44 வயதாகும் நிலையில் அவரின் திருமணம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிகை அனுஷ்கா உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். இதற்கு பின்னர் சினிமாவில் பெரிதளவில் அனுஷ்கா நடிக்கவில்லை.

சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது அனுஸ்கா ஒரு நபருடன் நெருக்கமாக நடந்து வருவது போன்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம்.

வைரல் காணொளி
தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த காணொளி சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததாகும்.
2016-ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவின் போது எடுக்கப்பட்ட விடியோ தான் அது. அனுஷ்காவுடன் வரும் அந்த நபர் ஒரு ஆடை வடிவமைப்பாளராம்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவின்போது, அனுஷ்கா அந்த ஆடை வடிவமைப்பாளருடன் ராம்ப் வாக் செய்த வீடியோவை தற்போது நிச்சயதார்தம் செய்த வீடியோ என்று வதந்தி பரப்பி வருகின்றனர் இணையவாசிகள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |