அனுஷ்காவா இது? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனுஷ்கா
நடிகை அனுஷ்கா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் ரெண்டு என்ற படம் மூலம் அறிமுகமானவர், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிம்பு என டாப் ஸ்டார்களுடன் நடித்து கோலிவுட் கனவு கன்னியாக வலம் வந்தார்.
வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், அருந்ததி, இஞ்சி இடுப்பழகி ,பாகுபலி போன்ற திரைப்படத்தின் மூலம் பெரிதாக பிரபலமடைந்தார். 35 வயதாகியும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
இவர் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் அதிக உடல் எடையுடன் நடித்திருந்தார். அதன்பின், அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால், பல பட வாய்ப்புகளையும் இழந்தார்.
வைரல் புகைப்படம்
இந்தநிலையில் அதிக உடல் எடையுடன் வயதான தோற்றத்தில் அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதனைக் கண்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அனுஷ்கா இப்படி குண்டாகிவிட்டார் என பலரும் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.