என் மகளுக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணமா? அவர் எங்கு இருக்கிறார் தெரியுமா? உண்மையை உடைத்த அனுபமாவின் தாய்
கடந்த நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் பும்ராவும், நடிகை அனுபமாவும் திருமணம் செய்துகொள்ள போவதாக இணைய ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அனுபமாவுக்கும், பும்ராவுக்கும் திருமணம் எல்லாம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. திருமண செய்தியில் உண்மை இல்லை என்று அனுபமாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அதில் அனுபமாவின் தாய் பேசுகையில், என் மகள் பும்ராவை திருமணம் செய்யப் போவது இல்லை. அவர் தற்போது படப்பிடிப்புக்காக குஜராத்தில் இருக்கிறார் என்றார். மேலும், அனுபமா தற்போது அதர்வாவின் தள்ளிப் போகாதே படத்தில் நடித்து வருகிறார்.
கண்ணன் இயக்கி வரும் அந்த படத்தில் அமிதாஷ் பிரதான், காளி வெங்கட், நரேன், வித்யுலேகா ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.