மாமனார் குறித்து உருக்கமாக பதிவிட்ட அஞ்சனா! கதறி அழுத காட்சிகள்
பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் மாமனார் சுப்பிரமணியனின் இறுதிச்சடங்கின் போது அவர் கதறி அழுத வீடியோ காட்சிகள் வைரலாகின.
பிரபல இசை நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய அஞ்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
கயல் சந்திரனுடன் காதல் திருமணம்
இவருக்கும், நடிகர் கயல் சந்திரன் இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 'ருத்ராக்ஷ்' என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றுவார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஞ்சனாவின் மாமனார் சுப்ரமணியன் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 73.
இவரின் இறுதி சடங்கில் VJ அஞ்சனா கதறி தேம்பி தேம்பி அழுத வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியது.

உருக்கமாக பதிவிட்ட அஞ்சனா
இந்நிலையில் தனது மாமனார் குறித்து பதிவிட்டுள்ள அஞ்சனா, நான் 10 வயதில் என் தந்தையை இழந்துவிட்டேன், அந்த இடத்தை என் மாமனார் பூர்த்தி செய்திருந்தார், தற்போது அவரையும் இழந்துவிட்டேன்.
எங்களுக்குள் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி அழகான அன்பு இருந்தது, சேட்டையான தந்தை- மகளுக்கான அழகான பந்தம் இருந்தது, புரிதல் இருந்தது, ஆழமான காதலும் இருந்தது.
அதை வார்த்தைகள் மூலம் விவரிக்க முடியாமல் போனாலும், எங்களுக்கு மட்டுமே அது புரியும், தற்போது அவரை இழந்து தவிக்கிறேன், எனது இதயத்தின் ஒருபகுதி அவரையும் எப்போதும் மிஸ் செய்து கொண்டிருக்கும், அதன் வலியும் நிரந்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
