தயாரிப்பாளர் ரவீந்திரன் மூலம் தான் பிக்பாஸ் ஆரி ஜெயித்தாரா? அனிதா வெளியிட்ட ஆடியோ
அனிதா சம்பத் தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் பேசிய போன் ஆடியோவை வெளியிட்டு புகார் கூறி இருக்கிறார். தான் முழு ஆடியோவையும் வெளியிட போவதாக ரவிந்தர் கூறி உள்ளார்.
பிக்பாஸ் 4 பற்றிய சர்ச்சை பற்றி தற்போது அனிதா சம்பத் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் ட்விட்டரில் சண்டை போட்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அனிதா சம்பத். அவர் பிக்பாஸ் சென்று வந்த பிறகு அவர் எந்த மீடியாவுக்கும் பேட்டி அளிக்கவில்லை. சமூக வலைதளங்கள் மற்றும் youtube சேனல் மூலமாக அவர் ரசிகர்களிடம் பேசி வருகிறார்.
இந்நிலையில் அனிதா சம்பத் ட்விட்டரில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் கடந்த சில தினங்களாக சண்டை போட்டு வருகிறார்.
ட்விட்டரில் ரவீந்தர் உடன் அனிதா பேசிய போன் ஆடியோவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் அனிதா சம்பத், "உங்களை கடந்த இரண்டு தினங்களாக கண்டுகொள்ளாமல் தான் இருந்தேன். அமைதியாக இருந்தேன். நான் உங்களை பற்றியோ, ஆரியை பற்றியோ பேசவில்லை. நீங்கள் தேவையில்லாமல் என் பெயரை இழுத்து புகழ் பெற பார்கிறீர்கள். ஆரி ரசிகர்களை எனக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது தான் நான் பேசுகிறேன்."
"நான் ஆரிக்கு தான் ஆதரவு தெரிவித்தேன். விமர்சனம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. இவர் திசைதிருப்ப பார்க்கிறார். நான் பாலா அல்லது ஆரிக்கு எதிரானவர் கிடையாது" .
"இவர் பெண் போட்டியாளர்களை, குறிப்பாக என்னை. தரம் தாழ்த்தி பேசுகிறார். கடைசி வாரத்தில் நான் ஆரியுடன் போட்ட சண்டையை தவிர அவருக்கு நான் சப்போர்ட் தான் செய்திருக்கிறேன். 'கப்போட வாங்க ஆரி' என நான் தான் சொல்லிவிட்டு வந்தேன்" என அனிதா கூறி உள்ளார்.
அனிதாவின் ட்விட்களுக்கு தயாரிப்பாளர் ரவீந்தர் பதில் அளித்து உள்ளார். 'இதை வெளியிட ஆறு மாதம் தேவை இல்லை. 28 ஜனவரி அன்று செய்த அழைப்பு அது. 1 மணி 21 நிமிடம் பேசினோம். தற்போது தான் பாலாஜி எனக்கு போன் செய்து உங்களது cheap behavior பற்றி பேசினார். அனிதாவின் முழு ஆடியோவை நான் பொதுமக்களுக்கு விரைவில் வெளியிடுகிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.
OK its a 2.43 mins audio...i only supported aari..i said aari's Victory is because of him..and also said review must be equal to everyone.i don't think this is wrong..this man is trying to manipulate asusual.. Iam not against bala or aari..i close to both.. T pic.twitter.com/Hp8QzkSuBt
— Anitha sampath_Official (@OfficialAnitha) June 4, 2021