உறுதி செய்யப்பட்ட அனிருத் திருமணம்! பொண்ணு யார் தெரியுமா?
அனிருத்தின் உறவினர்களில் ஒருவர் அனிருத் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.

அனிருத்
2012ம் ஆண்டு “3” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்ததால் இவர் இளம் இசையமைப்பாளராக முன்னணி நிலைக்கு வந்தார்.
இந்த நிலையில் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் சமீபகாலமாக கிசுகிசுக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் இசையமைப்பாளர் அளிருத் காவ்யா மாறனை டேட்டிங் செய்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வெளியாகி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதற்கு அனிருத் தனககும் காவ்யா மாறனுக்கும் திருமணம் என முன்னர் வெளியாகிய செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக, கல்யாணமா? லொள்ளு, சில்லா இருங்க மக்களே, வதந்திகளைப் பரப்பாதீங்க" (“Marriage ah? lol.. Chill out guys. Please stop spreading rumours”)என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால் தற்போது இந்த கிசுகிசுப்புக்களை உண்மையாக்கும் வகையில் அனிருத்தின் உறவினர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த விஷயத்தை உறுதி செய்திருக்கிறார்.

யார் அந்த பெண்?
யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஒய்.ஜி.மகேந்திரன் "அனிருத் ரொம்ப சாதுவான பையன். அவர் விரைவில் மிகப்பெரிய திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு வாழ்த்து சொல்லியாக வேண்டும். நானும் கேள்விப்பட்டதை வைத்துதான் உறுதியாக சொல்கிறேன். அவர்கள் சூப்பர் ஜோடி. அந்த பெண்ணும் சாதாரணமானவர் கிடையாது.
ஒரு டீமையே ஹேண்டில் செய்யும் சாமர்த்தியம் அந்த்ப் பெண்னுக்கு இருக்கிறது. அவருடைய அப்பாவின் தொழில் ஜீனை இவருக்குள் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் நிறைய பேரை சந்தித்திருக்கிறோம். அந்த பிஸ்னெஸ் மைண்ட் இந்தப் பெண்ணுக்கும் இருக்கிறது. அனிருத்தும், அந்தப் பெண்ணும் சேர்ந்து மியூசிக்கள் பிஸ்னெஸ் செய்வார்கள்" என்றார்.
ஆக, அனிருத் - காவ்யாவின் திருமணத்தை ஒய்ஜி மகேந்திரன் உறுதி செய்திருப்பதால் அனைவரும் வாழ்த்துக சொல்லிவருகிறர்கள். மேலும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |