இயக்குனர் பாக்கியராஜ் மகளுக்கு எழுதிய கடிதம் குறித்து தெரியுமா?
பாக்கியராஜ் தனது மகள் சரண்யாவிற்கு எழுதிய கடிதம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பாக்கியராஜ்
நடிகர் பாக்கியராஜ் பாரதிராஜாவிடன் உதவி இயக்குனராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவரால் நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஆவார்.
திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் பாக்கியராஜ் சாதாரண விஷயத்தையம் சுவாரசியமாக மாற்றும் திறமை கொண்டவர். இவரது படத்தில் பெரும்பாலும் சராசரி மனிதனின் வாழ்க்கையை சுற்றியே இருக்கும்.

இவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதனை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் பாக்கியராஜ் நேற்று காலை மாரடைப்பினால் மரணமடைந்தார்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ராசிகர்களுக்கு, பிரபலங்களுக்கு பேரதிர்ச்சியாகவே இந்த நிகழ்வு இருந்துள்ளது.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், இன்று அவரது பெசன் நகரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மகளுக்கு எழுதிய கடிதம்
நடிகர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர்.
மகளை தானே இயக்கி தயாரித்த பாரிஜாம் படத்தில் கதாநாயகியாக நடிக்கவைத்தார். இப்படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. பின்பு சரண்யா சினிமாவை விட்டே விலகினார்.

ஆனால் சரண்யா தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளுடன் இருந்த நிலையில், வெளியே தலைகாட்டாமல் இருந்தார்.
சரண்யா வீட்டில் இருந்தபடியே காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்து வரும் நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் பாக்கியராஜ் பேட்டி ஒன்று கூறுகையில், தனது மகள் 3 வயதாக இருக்கும் போது, காலை எழும்பும் போது ஏதாவது பரிசை கொடுத்து பிள்ளைகளை எழுப்புவதாக கூறினார்.

அவரது மனைவி பரிசாக கொடுக்காமல் ஏதாவது வாழ்த்து அட்டையில் கடிதம் எழுதி கொடுக்க கூறினார். தனக்கு ஆங்கிலம் வராது. தமிழில் எழுதுகிறேன் நீ பிற்காலத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிவிடு என்றார்.
ஆனாலும் 3 வயது மகளுக்கு என்ன புரியும் என்று கேட்ட போது, அவரது மனைவி இது ஒரு ஞாபகமாக வைத்து பெரிய பெண்ணாகிய பின்பு உங்களது மகள் பார்ப்பார் என்றார்.
தனது மகளுக்கு சரண்யா டியர் அம்லு, என்றும் தான் முதன்முதலாக வானவில்லை கண்டேன், உலகத்தில் இதுதான் அழகு என்று நினைத்தேன். அதன் பின்பு நட்சத்திரங்களை பார்த்தேன் வானவில்லை விட நட்சத்திரம் மிக அழகு என்று நினைத்தேன்.

அதன் பின்பு நிலாவை பார்த்தேன், அப்பொழுது வானவில் எப்போதாவது தான் வருகின்றது. நட்சத்திரம் அதிகமாக இருக்கின்றது. ஆனால் நிலா ஒன்று தான் உண்மையான அழகு என்று நினைத்தேன். அதன் பின்பு நீ பிறந்த பொழுது தான் தெரிந்தது உன்னை விட இந்த உலகில் வேறு ஒன்றும் அழகில்லை... நீ மட்டுமே அழகு என்று எழுதியதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |