கறுப்பு நிற உடையில் நடனம்: வைரல் வீடியோவுக்கு அஜித்தின் ரீல் மகள் விளக்கம்
கறுப்பு நிற உடை அணிந்து கொண்டு நடனமாடும் வீடியோவில் இருப்பது தான் இல்லை என அனிகா சுரேந்திரன் கூறியுள்ளார். என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் சமீபத்தில் கறுப்பு நிற உடையில் நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. இதை பார்த்த நெட்டிசன்கள், அனிகாவா இது என அதிர்ச்சியடைந்தனர், இந்நிலையில் தற்போது அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அனைவரும் நீக்குமாறும் கூறியுள்ளார் அனிகா.மேலும் தொடர்ந்த அவர், ”உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், இது என்னை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது. இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சொன்னது போல் இது நன்றாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ. அதைப் பார்க்கும்போது, நான் கூட அதிர்ச்சியடைந்தேன். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.