கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியா! இந்த 10 டிப்ஸ்களை கண்டிப்பா பாலோ பண்ணுங்க
சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா 10 டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
1. கொரோனா பாசிட்டிவ் என வந்தாலும் பாசிட்டிவ்வாக இருங்கள், நலமடைவது மட்டுமே குறிக்கோள்.
2. ஆவி பிடிப்பது பல மாற்றத்தை ஏற்படுத்தும், மூச்சுப்பயிற்சியை விடாமல் செய்யுங்கள்.
3. மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் கலந்த பால் ஆகியவை நல்லது, சளியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கலாம்.
4. பால்கனி, மொட்டை மாடி, ஜன்னல் அருகே நல்ல காற்றை சுவாசியுங்கள்.
5. விட்டமின் சி, பி, ஜிங்க் நமது எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியவை, இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
6. நெகடிவ் செய்திகளை பார்ப்பது, கோவிட் நிலவரம் போன்றவற்றை உங்கள் தலையில் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
7. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்களுக்கு உதவி செய்ய பல ஹெல்ப்லைன்கள் உள்ளன.
8. உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு காய்ச்சல் வந்தால், அவர்களை பரிசோதனை செய்து கொள்ள வைப்பது உங்கள் பொறுப்பு.
9. உங்களது அறிகுறிகள் மோசமடைந்தாலோ, மூச்சுவிட சிரமப்பட்டாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
10. கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களை கனிவாக அணுகுங்கள், இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.