தூங்குவதாக நினைத்து தாய் பிணத்துடன் 4 நாட்கள் வசித்த மகன் - சோக சம்பவம்
தாயின் பிணத்துடன் மகன் 4 நாட்கள் வாழ்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் ஆந்திரா மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி(41). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 10 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் தன் மகனை படிக்க வைத்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் பல்கலைகழகத்தில் பி.எச்,டி. பட்டம் முடித்த இவர் பட்டம் பெற காத்திருந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாகவே தலை சுற்றல் ஏற்பட்டு வந்துள்ளது.
தலைசுற்றல் இறப்பு
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மயங்கி தலைசுற்றல் காரணமாக கீழே விழுந்துள்ளார். விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆனால், தாய் இறந்தது தெரியாமல் மகன் அம்மா தூங்குவதாக நினைத்து வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்துள்ளான். அக்கம் பக்கத்தினர்கள் கேட்டப்போது அம்மா உறங்குவதாக தெரிவித்துள்ளான்.
4 நாட்களாக பிணத்துடன் வாழ்ந்த மகன்
இதனிடையே 4 நாட்களுக்கு பின்பு ராஜலட்சுமி உடலில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால், பக்கத்து வீட்டாளர்கள் அவர்களின் சகோதரனுக்கு போன் செய்துள்ளனர்.
அவர் வந்து உள்ளே பார்த்த போது ராஜலட்சுமி அழுகிய நிலையில் பிணமாக கிடைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் போலீசிற்கு போன் செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனையில், கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வெளியேறி மரணமடைந்தது தெரியவந்ததுள்ளது.