40 வயதிலும் குறையாத அழகுடன் டிடி! வெறும் வயிற்றில் குடிக்கும் இந்த பானம் தான் காரணமாம்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி 40 வயதை கடந்த நிலையிலும் குறையாத இளமை மற்றும் அழகுடன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றார்.
அதற்கான ரகசியம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் காலை வெறும் வயிற்றில் குடிக்கும் ஒரு பானம் தான் காரணம் என்று நடிகை கீர்த்தி சுரேஷிடம் குறிப்பிட்ட விடயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார்.

இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான்.இந்த நிகழ்ச்சி அவரின் அடையாளமாவே மாறியது என்றால் மிகையாகாது .
சின்னத்திரையில் மாத்திரமன்றி சினிமாவிலும் விசில் திரைப்படம் தொடங்கி ப.பாண்டி வரை ஒரு ரவுண்டு வந்தார்.

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை டிடி நிரூபித்து வரும் டிடி 40 வயதை கடந்த நிலையிலும் இளமை பொலிவுடன் ஜொலித்து வருகின்றார்.
இளமையின் ரகசியம் என்ன?
DD க்கு வயது 40ஐ கடந்து விட்டது என்றாலும் ஆங்காங்கே சில நரை முடி எட்டிப் பார்த்திருக்கிறதே தவிர அவருடைய சருத்தின் இளமையும் அழகும் இன்னும் 20 வயதில் இருந்ததை போன்றே இருக்கின்றது.

அதற்குக் காரணம் அவருடைய உணவுப் பழக்கம் தானாம். சைவ உணவை தான் விரும்பி சாப்பிடுவாராம். அதேபோல கார்ப்ஸை மிகவும் குறையவாகவும் ஃபைபர் அதிகமாகவும் இருக்கும் வகையில் டயட்டை பின்பற்றுகிறார். இதுவே அவரின் உடல் எடை பல வருடங்களாக மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.
உங்கள் சருமம் என்றும் இளமையாக இருப்பதற்கு என்ன காரணம் என சமீபத்திய பேட்டியொன்றில் கீர்த்தி சுரேஷிடம் டிடி கேட்ட போது, அதே கேள்வியை கீரத்தி சுரேஷ் டிடியிடம் திருப்பி கேட்டார்.

இதன் போது டிடி அவர் தினமும் வெறும் வயிற்றில் பருகும் ஒரு பானம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.அதனை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஃப்ரஷ்ஷான மஞ்சள் - 1 இன்ச் அளவு
இஞ்சி - 1 இன்ச் அளவு
எலுமிச்சை பழம் - பாதி

செய்முறை
இஞ்சி மற்றும் மஞ்சளை தோல் சீவிவிட்டு துருவி சாறெடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது தட்டியும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒன்றரை கிளாஸ் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலவையைச் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
ஒரு டமளர் அளவுக்கு அந்த தண்ணீர் வற்றியதும் அதை அடுப்பை அணைத்து விட்டு, குடிக்கும் சூடு அளவுக்கு வந்ததும் அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடவேண்டும்.
இந்த அற்புதமான ஸ்கின் மற்றும் பாடி டீடாக்ஸ் பானத்தை தான் பல வருடங்களாக DD குடிக்கிறாராம். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இதை தான் குடிப்பாராம். குறித்த விடயம் இணைத்தில் தற்போது பெரிதும் கவம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |