பட்டுபுடவையில் தேவதையாகவே மாறிய ஆர்த்தி ரவி! என்ன விசேஷம்?
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது பச்சை நிற பட்டுப்புடவையில் அசத்தல் அழகில் தேவதையாகவே மாறிய ஆர்த்தி ரவியின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பிரிவுக்கு பின்னர் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக இருந்துவருகிறார்.
ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.
ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி மோகன் இவ்வளவு பிடிவாதமாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் என்பதை ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இது குறித்து உண்மையாக காரணம் சரியாக தெரியவில்லை. குழந்தைகளுடன் ஆர்த்தி தனியான வாழ்ந்து வருகின்றார்.
இது ஒருபக்கம் இருக்க ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவருகிறார் ரவி. இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சிங்கிளாகவே மாஸ் காட்டும் வகையில் ஆர்த்தி ரவி தற்போது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அசத்தல் புகைப்படங்களை வெயிட்டு ஒரு பதிவும் போட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், பல பெண்கள் தங்கள் கனவுகளை நிறுத்தி,தொழில் வாழ்க்கையை விட்டுக்கொடுத்து, தேர்வுகளை கையொப்பமிட்டு, அவர்கள் அமைதியாக இருக்கும்போது சமூகம் அவர்களுக்காக கைதட்டுவதால் அதை "சமரசம்" என்று அழைக்கிறார்கள்.

நீங்கள் விரும்பினால் காதலுக்காக சமரசம் செய்யுங்கள், ஆனால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - ஏனென்றால் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் மாறக்கூடும். நிதி சுதந்திரம் இன்னும் உங்கள் பொறுப்பு. நான் இதை தாமதமாகக் கற்றுக்கொண்டிருக்கலாம்.இதைப் படிக்கும் ஒருவர் இதை முன்பே கற்றுக்கொள்வார்.என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவுக்கும் இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |